கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள ஈருடையாம்பட்டு கிராமத்தில் பாக்கியராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லூர்து சசிகலா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சசிகலாவுக்கும், மரியமதலேயம்மாள் என்பவருக்கும் நிலம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் மரியமதலேயம்மாள், அவரது கணவர் இம்மானுவேல் ராஜ் இருவரும் இணைந்து சசிகலாவை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளனர். இதுகுறித்து சசிகலா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் தம்பதி மீது போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Categories