திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தென்னக ரயில்வேயில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 2014-ஆம் ஆண்டு செந்தில்குமார் தன்னுடன் வேலை பார்க்கும் நண்பர்களான ஜெகன், சண்முக மூர்த்தி, கண்ணன், முத்துக்குமார் ஆகியோருடன் இணைந்து ஒரு ஏக்கர் நிலம் வாங்குவதற்காக முடிவு செய்தார். இதற்காக 5 பேரும் நவதி கிராமத்தில் வசிக்கும் தென்னக ரயில்வேயில் டெக்னீசியனாக வேலை பார்த்த சீனிவாசன்(45) என்பவரிடம் கடந்த 2014-ஆம் ஆண்டு 43 லட்ச ரூபாயை கொடுத்துள்ளனர்.
ஆனால் சீனிவாசன் கூறியபடி நிலத்தை வாங்கி கொடுக்கவில்லை. இதனையடுத்து செந்தில்குமாரும், அவரது நண்பர்களும் பணத்தை கேட்டுள்ளனர். இதனால் சீனிவாசன் 5 பேருக்கும் தலா 1 லட்ச ரூபாயை கொடுத்துவிட்டு, 38 லட்ச ரூபாயை கொடுக்காமல் மோசடி செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.