Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நிலம் வாங்க முயன்ற தொழிலதிபர்…. பல லட்ச ரூபாய் மோசடி…. போலீஸ் விசாரணை….!!!

தொழிலதிபரிடம் 15 லட்சம் ரூபாய் மோசடி செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேரள மாநிலத்தில் தொழிலதிபரான நவாஸ்(50) என்பவர் வசித்து வருகிறார். இவர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் நிலம் வாங்குவதற்கு முடிவு செய்தார். இந்நிலையில் தனக்கு அறிமுகமான குனியமுத்தூரில் வசிக்கும் அன்சாரி என்பவரிடம் நிலம் வாங்குவது குறித்து தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். அப்போது அன்சாரி சிறுமுகை அருகே நிலம் இருப்பதாகவும் 15 லட்சம் ரூபாய் முன்பணமாக தர வேண்டும் எனவும் தொழிலதிபரிடம் கூறியுள்ளார். இதனை நம்பி கடந்த 2019-ஆம் ஆண்டு நவாஸ் அன்சாரியிடம் 15 லட்சம் ரூபாயை கொடுத்துள்ளார்.

இதனை அடுத்து நவாஸ் அன்சாரியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு எனக்கு வங்கியில் கடன் கிடைக்கவில்லை எனவே நிலம் வாங்க கொடுத்த முன்பணத்தை திரும்பி தருமாறு கேட்டுள்ளார். பல மாதங்கள் ஆகியும் அன்சாரி அந்த பணத்தை கொடுக்காததால் நவாஸ் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |