நாசா விண்வெளி அமைப்பிற்காக சந்திரனில் முதன் முறையாக 4ஜி நெட்வொர்க்கை ஏற்படுத்தும் பணிக்கு டெல்லியில் பிறந்த நிஷாந்த் பத்ரா தலைமை வகிக்கிறார். டெல்லியில் 1978 ஆம் ஆண்டு நிஷாந்த் பத்ரா பிறந்தார். இதயயடுத்து இந்தூரில் உள்ளதேவி அகில்யா பல்கலைக்கழகத்தில் கம்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் துறையில் பட்டம்பெற்ற இவர், பின் இன்சீட் பிசினஸ் பள்ளியில் எம்பிஏ முடித்தார். அதன்பின் அமெரிக்காவில் உள்ள சதர்ன் மெதடிஸ்ட் பல்கலைக்கழகத்தில் தொலைத்தொடர்பு துறையிலும், கணினி அறிவியல் பாடத்திலும் முதுகலைப் பட்டம் பெற்றார்.
மேலும் பின்லாந்து நாட்டின் எஸ்பூ நகரில் வசிக்கும் நிஷாந்த் பத்ரா, நோக்கியா நிறுவனத்தில் உத்தி மற்றும் தொழில்நுட்ப பிரிவுக்கான சர்வதேச தலைவராக இருக்கிறார். அத்துடன் 9 நோபல்பரிசுகளையும் 5 டூரிங் விருதுகளையும் பெற்றுள்ள “பெல் லேப்ஸ்” நிறுவனத்தில் தொழில்நுட்ப கட்டமைப்பு மற்றும் ஆராய்ச்சிக்கு தலைமை வகிக்கிறார். நாசா விண்வெளி அமைப்புக்காக சந்திரனில் முதன் முறையாக 4ஜி நெட்வொர்க்கை ஏற்படுத்தும் பணிக்கு நிஷாந்த் பத்ரா தலைமை வகிக்கிறார். செவ்வாய் கிரகத்துக்கான பயணங்கள் உட்பட விண்வெளியில் எதிர்கால ரோபோ, மனித பயணங்களுக்கு இணைப்பை ஏற்படுத்திட வேற்று கிரக செல்லுலர்கட்டமைப்பை இவரது குழு நிர்மாணித்து வருகிறது.