Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நிலுவையில் இருந்த வழக்குகள்…. சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம்…. நீதிபதிகளின் உத்தரவு…!!

மதுரை ஐகோர்ட்டில் நிலுவையில் இருந்த வழக்குகள் அனைத்தும் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வருகிற 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலை முன்னிட்டு இதில் போட்டியிடும் வேட்பாளர்கள் பல்வேறு வழக்குகளை மதுரை ஐகோர்ட்டில் தொடர்ந்துள்ளனர். அதாவது குறிப்பிட்ட சின்னங்களை பெறுவது,  நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்கள், வேட்பாளர்கள் தகுதி நீக்கம் போன்ற வழக்குகள் மதுரை ஐகோர்ட்டில் நிலுவையில் இருந்துள்ளன.

இந்த வழக்குகளை நேற்று  நீதிபதிகள் கிருஷ்ணன் ராமசாமி, பரேஷ் உபாத்யாய் ஆகியோர் விசாரித்துள்ளனர். இதனையடுத்து நிலுவையில் இருக்கும் வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு நிர்வாக ரீதியான உத்தரவின் அடிப்படையில் மற்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Categories

Tech |