நெல் அறுவடை இயந்திரத்தில் இருந்து கீழே விழுந்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கரம்பக்குடி பகுதியில் ஸ்ரீராம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான நெல் அறுவடை எந்திரத்தில் மணிகண்டன் என்பவர் உதவியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நெல் அறுவடை இயந்திரத்தை ஸ்ரீராம் ஓட்டி சென்றுள்ளார். அவருக்கு அருகில் மணிகண்டன் அமர்ந்திருந்தார். இவர்கள் கீராத்தூர் பிரிவு சாலை அருகே சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக மணிகண்டன் நெல் அறுவடை இயந்திரத்தில் இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக மணிகண்டனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.