Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நிலைதடுமாறிய பேருந்து…. கால்வாய்க்குள் இறங்கியதால் பரபரப்பு…. அலறிய பயணிகள்….!!

அரசு பேருந்து திடீரென கட்டுபாட்டை இழந்து கால்வாய்க்குள் இறங்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இருந்து அரசு பேருந்து ஒன்று ராமநாதபுரம் நோக்கி சென்று கொண்டிருந்துள்ளனர். இந்நிலையில் அந்த பேருந்து கருங்குளம் அருகே சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனம் ஒன்று குறுக்கே வந்ததால் டிரைவர் திடீரென பிரேக் போட்டுள்ளார். அப்போது பேருந்து நிலைதடுமாறி அருகே இருந்த கால்வாய்க்குள் இறங்கியது.

ஆனால் டிரைவர் துரிதமாக செயல்பட்டு பேருந்தை கட்டுப்பட்டுக்குள் கொண்டு வந்ததால் பேருந்தில் இருந்த 62 பயணிகளும் அதிஷ்டவசமாக காயங்களின்றி தப்பியுள்ளனர். இதனையடுத்து அவர்கள் அனைவரையும் மாற்று பேருந்து மூலம் அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து தகவலறிந்து சென்ற போலீசார் பேருந்தை மீட்ட நிலையில் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |