சிவகங்கையில் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறியத்தில் மரத்தின் மீது மோதி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எம்.கோவில்பட்டி பகுதியில் வெள்ளிமலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராதாகிருஷ்ணன் (வயது 27) என்ற மகன் இருந்தார்). இவருக்கு திருமணம் முடிந்து ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று இவர் எம்.கோவில்பட்டிக்கு, சிங்கம்புணரியில் இருந்து மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.
மோட்டார் சைக்கிள் மருதிப்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த ஆலமரத்தின் மீது வேகமாக மோதியது. இதில் ராதாகிருஷ்ணனுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டார். இந்த சம்பவம் குறித்து எஸ்.வி.மங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.