மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆவூர் பகுதியில் விவசாயியான முருகேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருச்சி மாவட்டத்திலுள்ள ஆலந்தூர் பகுதிக்கு சொந்த வேலை காரணமாக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இந்நிலையில் ரிங் ரோடு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக முருகேசனின் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்துவிட்டது.
இதனால் படுகாயம் அடைந்த முருகேசனை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி முருகேசன் பரிதாபமாக இறந்துவிட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.