மோட்டார்சைக்கிள் விபத்துக்குள்ளானதில் வடமாநில தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள சமயநல்லூர் நான்கு வழி சாலையில் லாரி டிரான்ஸ்போர்ட் கம்பெனி அமைந்துள்ளது. இந்த கம்பெனியில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ரூப்சிங், தூத்துநாத் ஆகிய இரண்டு பேர் வேலை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் இரண்டு பேரும் மோட்டார் சைக்கிளில் சமயநல்லூர்-மதுரை மெயின் ரோட்டில் ஊமச்சிகுளம் பேருந்து நிறுத்தம் அருகில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது சாலையின் குறுக்கே வந்ததால் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயமடைந்த இரண்டு பேரையும் அருகில் உள்ளவர்கள் மட்டும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ரூப்சிங் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.