ஆம்னி பேருந்து சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லி கீழ்மாநகர் பகுதியில் ஜம்பு என்பவர் வசித்து வருகிறார். இவர் அஸ்வின்(25) என்ற மகன் இருந்துள்ளார். இவர் புகைப்பட கலைஞர் ஆவார். இந்நிலையில் அஸ்வின் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் அரும்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிளில் இருந்து அஸ்வின் கீழே விழுந்தார்.
அவர் மீது பின்னால் வந்த ஆம்னி பேருந்து சக்கரங்கள் ஏறி இறங்கியதால் சம்பவ இடத்திலேயே அஸ்வின் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஆம்னி பேருந்து ஓட்டுநரான கார்த்திக் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.