மோட்டார் சைக்கிளிலிருந்து நிலை தடுமாறி கீழே விழுந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் அலெக்சாண்டர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அலெக்சாண்டர் தனது மோட்டார் சைக்கிளில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தார். இவர் உடையார்பாளையம் இடையார் பிரிவு சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்தார்.
இதனையடுத்து அலெக்சாண்டரை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.