மோட்டார் சைக்கிள் மரத்தின் மீது மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஓ.புதூர் கிராமத்தில் சந்தோஷ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்களான கண்ணன் மற்றும் செல்வின்பாரதி ஆகியோருடன் திருப்பத்தூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் சாலையோரம் இருந்த மரத்தின் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சந்தோஷ்குமார், கண்ணன், செல்வின்பாரதி ஆகியோரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சந்தோஷ்குமார் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். மேலும் படுகாயமடைந்த 2 பேரை சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.