மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கொல்லப்பட்டி பகுதியில் மாட்டு வியாபாரியான ராஜேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் ராஜேஷ் சந்தைக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இவர் வேலப்பர் கோவில் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்தது.
இதில் படுகாயமடைந்த ராஜேஷை அருகில் உள்ளவர்கள் மட்டும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ராஜேஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.