Categories
தேனி மாவட்ட செய்திகள்

நிலைதடுமாறிய வாகனம்….. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் தனியார் நிறுவன மேற்பார்வையாளர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டத்தில் உள்ள தாமரைக்குளம் பள்ளிவாசல் தெருவில் ரகுமான் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் கட்டுமான நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ரகுமான் தனது வேலை தொடர்பாக மோட்டார் சைக்கிளில் பானான்குளம் அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து ரகுமான் படுகாயம் அடைந்தார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அளிக்கப்பட்ட சிகிச்சை ரகுமான் பலனின்றி பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |