Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நிலைத்தடுமாறிய டிராக்டர்….. வாலிபருக்கு நேர்ந்த கொடூரம்…. போலீஸ் விசாரணை…!!

டிராக்டரில் இருந்து கீழே விழுந்த நபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள செல்லம்பட்டு கிராமத்தில் அலெக்ஸ் பாண்டியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சொந்தமாக டிராக்டர் வைத்து ஓட்டி வந்துள்ளார். இவர் விவசாய நிலத்தை உழுவதற்காக டிராக்டரில் சென்றுள்ளார். அவர் வேலை முடிந்து திரும்பி வரும் வழியில் திடீரென டிராக்டரில் இருந்து நிலைத்தடுமாறி அலெக்ஸ் பாண்டியன் கீழே விழுந்துள்ளார்.

இந்த விபத்தில் அலெக்ஸ் பாண்டியனுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அலெக்ஸ்பாண்டியன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கச்சிராபாளையம் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |