Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நிலைத்தடுமாறி கவிழ்ந்த ஆட்டோ…. 2 வயது குழந்தைக்கு நேர்ந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!!

நிலைத்தடுமாறி வாகனம் கவிழ்ந்ததில் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திங்கள்சந்தை அருகே கல்லுக்கூட்டம் பகுதியில் சிபுராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஷனவ் (2) என்ற மகன் இருந்துள்ளான். இந்நிலையில் ஷனவ் பாட்டி பிரேமலதாவுடன் ஆட்டோவில் திங்கள்சந்தை பகுதிக்கு சென்றுள்ளார். இந்த ஆட்டோவை வினுக்குமார் என்பவர் ஓட்டியுள்ளார். இந்த ஆட்டோ பூச்சாஸ்தான்விளை அருகே சென்று கொண்டிருந்த போது  திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுனருக்கும், பிரேமலதாவுக்கு லேசான காயங்கள் மட்டுமே ஏற்பட்டது.

ஆனால் குழந்தைக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக நெய்யூரில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து இரணியல் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஆட்டோ ஓட்டுனரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |