கோர விபத்தில் நீதிபதி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் சத்தர்பூர் பகுதியை சேர்ந்த மாவட்ட நீதிபதிகள் 2 பேர் காரில் கான்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்த கார் பாரா சௌகி அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது கார் திடீரென நிலைத்தடுமாறி நின்று கொண்டிருந்த டிராக்டரின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் நீதிபதிகள் ரிஷி திவாரி, மத்தோரியா மற்றும் கார் ஓட்டுநருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதில் நீதிபதி ரிஷி திவாரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நீதிபதி மத்தோரியா மற்றும் கார் ஓட்டுநர் ராம் தினகர் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பிறகு உயிரிழந்த நீதிபதி ரிஷி திவாரியின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.