கரும்பு ஏற்றி சென்ற டிராக்டர் கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி அருகே முண்டியம்பாக்கம் பகுதியில் இருக்கும் சர்க்கரை ஆலைக்கு டிராக்டர் ஒன்று கருப்பு ஏற்றுக்கொண்டு சென்றது. இந்நிலையில் டிராக்டர் சிந்தாமணி அருகே சென்றபோது திடீரென நிலைதடுமாறி கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிராக்டரில் இருந்த கரும்புகள் சாலையில் சிதறியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து விழுப்புரம் தாலுகா காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் பொதுமக்கள் உதவியுடன் சாலையில் கிடந்த கரும்பை அகற்றினர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.