தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றது முதலே பல்வேறு நலத் திட்டங்களை தமிழக மக்களுக்காக செயல்படுத்தி வருகிறார். ஒவ்வொரு துறையிலும் எந்த தவறும் நடந்துவிடக்கூடாது என்பதற்காக மிகவும் கவனத்துடன் பார்த்து பார்த்து அந்தந்த துறைக்கு நம்பிக்கையான செயல் தலைவர்களை நியமித்து வருகிறார். திமுகவின் ஆட்சி அமைந்து 9 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் திமுகவின் தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் பல நிறைவேற்றப்பட்டு விட்டன. திமுகவின் ஒன்பது மாத கால நல்லாட்சிக்கு கிடைத்த பரிசு உள்ளாட்சித் தேர்தலில் திமுக அடைந்த மாபெரும் வெற்றி என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை.
இந்நிலையில் சென்னையில் அடுத்த வாரம் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இது வழக்கமாக நடைபெறும் மாநாடு தான் என்றாலும் சட்டம் ஒழுங்கு குறித்து முதல்வர் முக ஸ்டாலின் சுற்றறிக்கையை கேட்டுள்ளார் என்பதனால் அதிகாரிகளும் காவல் கண்காணிப்பாளர்களும் வழக்கத்தைவிட சற்று நெருடலில் உள்ளனர். இந்த மாநாட்டில் தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.