கொரோனா பரவல் காரணமாக விமான பயணிகளுக்கு சவூதி அரேபிய அரசு தடை விதித்துள்ளது.
கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கொடிய கொரோனாவுடன் மக்கள் போராடி வரும் நிலையில், சமீபகாலமாக பகொரோனா தொற்று திடீரென ஏறுவதும், இறங்குவதுமாக இருக்கிறது. இந்நிலையில் இந்தியா உட்பட 20 நாடுகளுக்கு இடையேயான விமான பயணிகளுக்கு சவுதி அரேபியா அரசு தடை விதித்துள்ளது. சவுதி அரேபியாவில் தற்போது கொரோனா பரவல் கடுமையாக உயர்ந்து வருவதால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நாளை முதல் இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளுக்கு இடையேயான விமான போக்குவரத்தை தடை விதிக்கப் போவதாக சவுதி அரேபிய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் பல்வேறு நாடுகளுக்கும் விமான பயணிகளுக்கு சவுதி அரேபிய அரசு தடை விதித்துள்ளது. தூதரக அதிகாரிகள், மருத்துவ ஊழியர்கள் மற்றும் அவருடைய குடும்பங்களுக்கு மட்டுமே இதிலிருந்து விலக்கு அளிக்கப்படலாம் என்று கூறப்பட்டுள்ளது. இது வரை சவுதி அரேபியாவில் 3 லட்சத்து 60 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 6,400 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இங்குள்ள மக்களுக்கு பைசர் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.