Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நிலை தடுமாறிய இருசக்கர வாகனம்…. துடிதுடித்து இறந்த டிரைவர்…. ராமநாதபுரத்தில் கோர விபத்து….!!

இருசக்கர வாகனம் நிலை தடுமாறியதில் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள பேரையூர் பகுதியில் வசித்து வந்த சரவணகுமார் என்பவர் முதுகுளத்தூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று சரவணகுமார் இருசக்கர வாகனத்தில் பேரையூரை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது எட்டிசேரி வளைவு சலறி அருகே சென்றபோது இருசக்கர வாகனம் திடீரென நிலை தடுமாறியதில் சரவணகுமார் கீழே விழுந்துள்ளார். இந்த கோர விபத்தில் சரவணகுமார் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார். இதனையறிந்து சென்ற பேரையூர் போலீசார் உயிரிழந்தவரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |