மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆவுடையாபுரம் கிராமத்தில் சதாம் உசேன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் குப்பாம்பாட்டிக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது நிலைதடுமாறி சதாம் உசேன் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்துவிட்டார் . இந்த விபத்தில் படுகாயமடைந்த சதாம் உசேனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சதாம் உசேன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.