இருசக்கர வாகனம் நிலை தடுமாறி தடுப்புச்சுவர் மீது மோதியதில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை அடுத்துள்ள மரிக்குண்டு கிராமத்தில் ரமேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரும் அதே பகுதியை சேர்ந்த பவுன்ராஜ் என்பவரும் இருசக்கரவாகனத்தில் க.விலக்கு சென்றுவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி கொண்டிருந்துள்ளனர். இந்நிலையில் ரமேஷ் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்துள்ளார். அப்போது கண்டமனூர் சாலையில் சென்றுகொண்டிருந்த போது இருசக்கர வாகனம் நிலை தடுமாறி சாலையில் நடுவே இருந்த தடுப்புசுவரில் மோதியுள்ளது.
இந்த விபத்தில் ரமேஷ் மற்றும் பவுன்ராஜ் படுகாயம் அடைந்துள்ளனர். இதனை பார்த்த அப்பகுதி வழியாக சென்றவர்கள் இருவரையும் மீட்டு தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே ரமேஷ் துரதிஷ்ட வசமாக உயிரிழந்துள்ளார். மேலும் பவுன்ராஜ்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இதுகுறித்து தகவலறிந்து சென்ற க.விலக்கு காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.