மொபட்டில் சென்று கொண்டிருந்த கொத்தனார் நிலை தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் நமகிரிபேட்டையை அடுத்துள்ள செம்பகவுண்டன்புதூர் பகுதியில் வடிவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கொத்தனாராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று வடிவேல் தனது மொபட்டில் மங்களபுரத்திற்கு சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது செல்லும் வழியில் திடீரென மொபட் நிலை தடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது.
இதில் படுகாயமடைந்த அவரை அப்பகுதி வழியாக சென்றவர்கள் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட நிலையிலும் வடிவேல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து மங்களபுரம் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.