Categories
தேனி மாவட்ட செய்திகள்

நிலை தடுமாறி விழுந்த மகள்…. காப்பாற்ற சென்ற தாய்க்கு நேர்ந்த சோகம் …. தேனியில் பரபரப்பு….!!

தேனியில் நீரில் மூழ்கவிருந்த மகளை காப்பாற்ற முயன்ற தாய் பரிதாபமாக இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் வரசநாட்டில் வடிவேலு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குமுதா என்ற மனைவியும், நந்தினி என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் குமுதாவும், நந்தினியும் அதே பகுதியிலிருக்கும் தங்களது தோட்டத்திற்கு சென்றனர். இந்நிலையில் நந்தினி தோட்டத்திற்கு அருகே பயன்பாட்டில் இல்லாத கல்குவாரி குளத்தில் தண்ணீர் எடுக்க சென்றுள்ளார். அப்போது அவர் தெரியாத விதமாக நிலைதடுமாறி குளத்தில் விழுந்திருக்கிறார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த தாய் குமுதா மகளை காப்பாற்ற குளத்தில் இறங்கியுள்ளார் .

அதன் பின் இருவராலுமே வெளியேற முடியாமல் நீரில் நீச்சலடித்தபடி காப்பாற்றுங்கள் என்று அலரி கூச்சலிட்டிருக்கிறார்கள். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்க முயற்சித்ததில் மகள் நந்தினியை மட்டுமே உயிருடன் மீட்டுள்ளனர். ஆனால் தாய் குமுதா நீரின் ஆழமான பகுதிக்கு சென்று நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்துள்ளார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |