Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நில அதிர்வு ஏற்பட்டதா….? வீடுகளை விட்டு பதறி ஓடி வந்த பொதுமக்கள்…. தாசில்தாரின் தகவல்…!!

நில அதிர்வு ஏற்பட்டதாக பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் நீர்முள்ளிகுட்டை என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் உள்ள வீடுகளில் இருக்கும் பொருட்கள் காலை 11:30 மணி அளவில் ஆங்காங்கே சிதறி கீழே விழுந்தது. மேலும் சில இடங்களில் அதிர்வு ஏற்பட்டதாக மக்கள் உணர்ந்தனர். இதனால் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்து அச்சத்தில் வெளியே ஓடி வந்தனர். இந்நிலையில் பொதுமக்களும், தெருவில் நின்று கொண்டிருந்த நாய்களும் ஆங்காங்கே சிதறி ஓடிய காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. கோலத்துகோம்பை, சின்னமநாயக்கன்பாளையம் நீர்முள்ளிகுட்டை உள்ளிட்ட சுமார் 10 கிலோ மீட்டர் பகுதியில் இருக்கும் கிராம மக்கள் நில அதிர்வை உணர்ந்தனர்.

இதுகுறித்து வாழப்பாடி தாசில்தார் வரதராஜன் கூறும்போது, சில கிராமங்களில் வெடிச்சத்தம் கேட்டதோடு, நில அதிர்வை உணர்ந்ததாக மக்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் டெல்லியில் உள்ள நில அதிர்வு பதிவகத்திற்கு மாவட்ட ஆட்சியர் தொடர்பு பேசியபோது நில அதிர்வு ஏற்பட்டதற்கான பதிவுகள் இல்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர். அந்த சமயம் 3 ராணுவ ஜெட் விமானங்கள் அடுத்தடுத்து வானில் பறந்து சென்றுள்ளது. அதிலிருந்து வந்த சத்தத்தை கூட மக்கள் தவறாக புரிந்திருக்கலாம். எனவே பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் எனவும், வதந்திகளை பரப்ப வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |