நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றிய திமுக செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசன் நில அபகரிப்பு புகாரின்பேரில் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி பகுதியைச் சேர்ந்தவர் தாமஸ் ஆல்வா எடிசன் இவர் திராவிட முன்னேற்ற கழகத்தின் கீழையூர் ஒன்றிய கழக செயலாளராக இருந்து வருகிறார். இவர் மீது நாகை அதிமுக நகர செயலாளர் தங்க கதிரவன் சில தினங்களுக்கு முன்பு நாகை நில அபகரிப்பு பிரிவு போலீசாரிடம் புகார் அளித்திருந்தார். அந்த புகாரில் நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருள்மிகு ராஜகிரிஸ்வரர் திருக்கோவில் புனித வேளாங்கண்ணி திருத்தல பேராலயம் அரசு புறம்போக்கு சுனாமி குடியிருப்பு ஆகியவற்றுக்குச் சொந்தமான சொத்துக்களை போலி ஆவணங்கள் தயார் செய்து தாமஸ் ஆல்வா எடிசன் அபகரித்து இருப்பதாகவும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் அளித்திருந்தார்.
அதனைத்தொடர்ந்து தாமஸ் ஆல்வா எடிசன் மீது நில அபகரிப்பு எட்டு பிரிவுகளுக்கு வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை சென்னை சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதியில் தங்கியிருந்த தாமஸ் ஆல்வா எடிசனின் நாகை நில அபகரிப்பு பிரிவு டி.எஸ்.பி சரவணன் தலைமையில் போலீசார் கைது செய்தனர். இதேபோல் அதிமுகவைச் சேர்ந்த வேளாங்கண்ணி பகுதியைச் சேர்ந்த ஏழு பேர் மீது திமுகவைச் சேர்ந்த நில அபகரிப்பு புகார் கொடுக்கப்பட்டு விசாரணை நடந்து வருவதாக நாகை எஸ்.பி அலுவலகத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.