Categories
சினிமா தமிழ் சினிமா

நில மோசடி வழக்கு….. கமிஷனர் அலுவலகத்தில் மீண்டும் ஆஜரானார் நடிகர் சூரி….!!!!

நிலமோசடி வழக்கு தொடர்பாக கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் சூரி ஆஜரானார்.

பிரபல காமெடி நடிகர் சூரி சென்னை அடையாறு காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் சென்னையை அடுத்து சிறுசேரியில் நிலம் வாங்கி தருவதாக கூறி 2.70 கோடி பணத்தை மோசடி செய்துவிட்டதாக கூறி சினிமா தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் மற்றும் முன்னாள் டிஜிபி ரமேஷ்கொடவாலா ஆகியோர் மீது புகார் அளித்திருந்தார். டிஜிபி ரமேஷ்கொடவாலா நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை ஆவார். இவர் தன் மீதான புகாரை மறுத்தார்.

இந்நிலையில் இந்த புகார் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி 6 மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்திருந்தது. அதன்படி நடிகர் சூரியின் புகாரை மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் மீனா மற்றும் உதவி கமிஷனர் ஜான்விக்டர் ஆகியோர் நேரடியாக விசாரித்து வந்தனர். கடந்தமாதம் துணை கமிஷனர் மீனா மற்றும் உதவி கமிஷனர் ஜான் விக்டர் சூரியிடம் விசாரணை நடத்தினர். அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் மீண்டும் இரண்டாவது முறை அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில் 100 கேள்விகள் கேட்கப்பட்டதாக கூறப்படுகின்றது. தேவைப்பட்டால் மீண்டும் விசாரணைக்கு வரவேண்டும் எனவும், காவல்துறையினர் நடிகர் சூரியிடம் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |