Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

நிழலில் அமர்ந்திருந்த முதியவர்….. சக்கரத்தில் சிக்கி பலியான சோகம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

நெல் அறுவடை இயந்திர சக்கரத்தில் சிக்கி முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்திலுள்ள செல்லபிள்ளையார்குளம் மேல தெருவில் பொன்னுசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது வயலில் நேற்றுமாலை அறுவடையான நெல் மூட்டைகளை டிராக்டரில் ஏற்றி அனுப்பி விட்டு இரண்டாவது லோடு ஏற்றுவதற்காக காத்திருந்தனர். இந்நிலையில் அறுவடை இயந்திரத்தின் பின்னால் உள்ள நிழலில் பெண் பணியாளர் ஒருவரும் பொன்னுசாமியும் உட்கார்ந்து இருந்தனர். இதனை கவனிக்காத நெல் அறுவடை இயந்திர ஓட்டுநர் டிராக்டர் வந்தவுடன் லோடு ஏற்றுவதற்காக வாகனத்தை பின்னோக்கி இயக்கியுள்ளார்.

இதனைப் பார்த்த பெண் ஊழியர் வேகமாக எழுந்து சென்றுவிட்டார். ஆனால் பொன்னுசாமி எழுந்து செல்வதற்குள் சக்கரத்தில் சிக்கி அவர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற முதியவரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |