மாணவர்களுக்கு நிழல் இல்லாத நாள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி காந்தி சிலை முன்பு வைத்து தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் “நிழல் இல்லாத நாள்” குறித்து அறிவியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியானது தமிழ்நாடு அறிவியல் இயக்க கிளை தலைவர் அன்பரசு தலைமையில் நடைபெற்றது. இதில் ஆசிரியர் எழிலரசி, கிளையின் பொருளாளர் பாஸ்கரன், அறிவியல் இயக்கத்தின் மாநில துணை தலைவர் சேதுராமன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில துணை தலைவர் சேதுராமன் பேசியதாவது. நிழல் இல்லாத நாள் என்பது ஆண்டுக்கு இருமுறை கடக ரேகை மற்றும் மகர ரேகை இடையே பூமியின் திசை மாறும்போது பூமத்திய ரேகைக்கு நேரெதிராக சூரியன் வருவதன் காரணமாக இந்த நிழல் இல்லாத நாள் ஏற்படுகிறது என அவர் கூறியுள்ளார்.