Categories
மாநில செய்திகள்

“நிவர் அட்ராசிட்டி” நடிகர்களையும் விட்டுவைக்காத நெட்டிசன்கள்…. வைரலாகும் மீம்ஸ்…!!

புயல் சோதனை காலத்திலும் கூட நெட்டிசன்கள் நடிகர்களின் பட காட்சிகளை வைத்து மீம்ஸ் போட்டு சிரிக்க வைக்கின்றனர்.

நிவர் புயல் தமிழகத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துமோ என்ற அச்சத்திலும், எச்சரிக்கை உணர்வோடு இருந்த சூழலில் பெரும்பாலான சேதத்தை ஏற்படுத்த வில்லை. ஆனால் பெரும் மழையை கொடுத்துள்ளது. தற்போது இதனால் பல்வேறு இடங்களில் நீர் தேங்கி இருக்கும் நிலையை பார்க்க முடிகிறது. பல சிரமத்தையும் மீறி பால் விநியோகம் செய்பவர்கள் விநியோகம் செய்து வருகின்றனர். தரைத்தளத்தில் வசிப்பவர்கள் மிகப் பெரிய அளவில் பாதிப்பை சந்திப்பதாகவும்,  இயல்பு வாழ்க்கை முடங்கி விட்டதாகவும் கூறி வருகின்றனர்.

வெளியில் வந்து அத்தியாவசிய பொருட்களை வாங்கிச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது அவதிக்குள்ளாகிறார்கள் இருப்பினும் இடத்தில் இருந்து அப்புறப்படுத்தும் பணி மும்முரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இத்தனை சோதனைகளுக்கு மத்தியிலும் சமூக வலைதளத்தில் மீம்ஸ் போட்டு நெட்டிசன்கள் நம்மை சிரிக்க வைத்து வருகிறார்கள். மேலும் நடிகர்களின் படங்கள், காட்சிகளைப் போட்டு வேடிக்கையாக மீம்ஸ் போடுகிறார்கள்.

Image

Image

 

Categories

Tech |