நிவர் புயல் பற்றிய ஒரு அடுக்கு மொழி கவிதை சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிக் கொண்டி ருப்பதால் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
வங்க கடலில் நிவர் புயல் உருவாக தொடங்கியதிலிருந்தே அது ஒரு விவாதப் பொருளாக மாறியுள்ளது. இருக்கையின் நுனியில் இருக்க வைக்கும் புயல் பற்றி பொதுமக்கள் எந்நேரமும் பேசிக் கொண்டிருக்கின்றனர். இந்த புயல் பற்றி சமூக வலைத்தளங்களில் ஒரு அடுக்கு மொழி கவிதை வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. அது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அந்தக் கவிதை,
“நிவர்-எங்கள் வீட்டில் இல்லை பவர்.
எங்களுக்கு சரியாக கிடைக்கவில்லை டவர்.
நீ வருண பகவானால் வந்த ஷவர்.
உன்னுடைய வேகத்தால் வீழ்ந்துவிடும் பழைய சுவர்.
உன்னால் நனைந்தால் வந்துவிடும் பீவர்.
உன்னை பற்றிய நியூஸ் கேட்டால் வருகிறது பியர்.
உன்னால் எகிறுகிறது சுகர்.
உன்னால் சாலையிலேயே ஓடுகிறது ரிவர்.
உனக்கு இல்லை எவரும் நிகர்.
எங்களை காப்பது இனி எவர்?.
நீ வேகமாக இங்கிருந்து நகர்.
வராதே இங்கே நெவர்.”
இந்த வாசகங்கள் அதில் இடம் பெற்றுள்ளன.