நிவர் புயல் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் இரண்டாவது நாளாக நேற்றும் நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாததால் சுமார் ஒரு லட்சம் பேருக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
நிவர் புயல் எச்சரிக்கையாக தூத்துக்குடி துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும் மீனவர்கள் யாரும் அறிவிப்பு வரும் வரை கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தபட்டுள்ளனர். இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் மூன்றாயிரம் நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் நேற்று 2-வது நாளாக கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை.
மேலும் தங்கள் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தும் பணியிலும் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இரண்டு நாட்களாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லாததால் மீனவர்கள் மற்றும் மீன்பிடி தொழில் சார்ந்தவர்கள் என ஒரு லட்சம் பேருக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.