வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், உருவாகியுள்ள நிவர் புயல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என தமிழக அரசு முன்பே எச்சரித்தது. இதன் காரணமாக சில ரயில் பயணத்தை அரசு ரத்து செய்தது. இந்நிலையில், ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கான பதிவு செய்யப்பட்ட கட்டணம் 15 நாட்களுக்குள் திருப்பி வழங்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இணையவழியில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு கட்டணம் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பராமரிப்பு பணி நடைபெறுவதால் நவம்பர் 24, 25 ஆம் தேதிகளில் சென்னை சென்ட்ரல் ரயில் மார்க்கத்தில் புறநகர் , சிறப்பு ரயில் சேவைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.