புயல் காரணமாக ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கான கட்டணம் திருப்பி வழங்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது மேலும் வலுவடைந்து தீவிர புயலாக மாறியுள்ளது. அதனால் ரயில் சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. நிவர் புயல் காரணமாக ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கான கட்டணம் 15 நாட்களுக்குள் திருப்பி வழங்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும் இணைய வழியில் டிக்கெட் முன்பதிவு செய்து ஒரு கட்டணம் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
அதுமட்டுமன்றி பராமரிப்பு பணி நடைபெறுவதால் நவம்பர் 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் சென்னை சென்ட்ரல்-கூடூர் ரயில் மார்க்கத்தில் புறநகர் சிறப்பு ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட உள்ளது என தெரிவித்துள்ளது.