Categories
சென்னை மாநில செய்திகள்

நிவர் புயலில் ஏற்பட்ட சேதம்… அரசு வெளியிட்ட அறிக்கை… 3 பேர் பலி..!!

நிவர் புயலில் சேதம் குறித்து அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மூவர் பலியாகியுள்ளனர்

நிவர் புயல் நேற்று இரவு 10.30 மணி அளவில் புதுவைக்கு வடக்கே 30 கிலோமீட்டர் தொலைவில் கரையை கடக்க துவங்கியது. இன்று காலை 2.30 மணி அளவில் புயல் முழுவதும் கரையை கடந்தது. கடந்த இரண்டு நாட்களாக புயலின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. புயலால் பல்வேறு இடங்களில் சேதம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக உரிய அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். இன்று காலை வரை நடைபெற்ற ஆய்வில் சேதங்கள் தொடர்பான அறிக்கையை அதிகாரிகள் தற்போது வெளியிட்டுள்ளன. இந்தப் புயலின் காரணமாக இதுவரை மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

மூவர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல் 21 கால்நடைகள் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன பாதிக்கப்பட்ட மக்கள் தங்குவதற்கு 3,085 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த முகாம்களில் 93,030 ஆண்கள், 94,105 பெண்கள், 40,182 குழந்தைகள் என மொத்தம் 2,27317 பேர் தங்கியுள்ளனர். உணவு மற்றும் மருத்துவ வசதி வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக 921 முகாம்களும், 234 நடமாடும் மருத்துவக் குழுக்கள் இயங்கி வருகின்றன.

Categories

Tech |