புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் கடற்படை வீரர்கள், தீயணைப்பு வீரர்கள் உள்ளனர்.
நிவர் புயலை எதிர்கொள்ள மத்திய மாநில அரசு பேரிடர் துறையினர், மாநில காவல்துறை, தீயணைப்பு துறை, கடற்படை வீரர்கள் உள்ளிட்டவர்களை தயார் நிலையில் வைத்துள்ளனர். இந்த நிலைக்கு இந்திய கடற்படை வீரர்களும் ஐந்து குழுக்களாக தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளதாக அறிக்கை வெளியாகியுள்ளது. இந்திய கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் சென்னையில் மீட்பு பணியில் ஈடுபட்ட ஐந்து வெள்ள மீட்பு குழுவினர் மற்றும் நீச்சல் தயார் நிலையில் உள்ளனர்.
நாகப்பட்டினம், இராமேஸ்வரம் கடற்கரை தளம் மற்றும் ஐஎன்எஸ் பருந்து விமானப்படைத் தளத்தில் தலா ஒரு குழு தயாராக உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரி கடல் பகுதியில் மீட்பு மற்றும் நீச்சல் குழுவினருடன் ஐஎன்எஸ் ஜோதி நிறுவப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.