புயல் வருவதற்கு முன் கூட்டி நாம் செய்யவேண்டிய மற்றும் செய்யக்கூடாத முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை காண்போம்.
நிவர் புயல் வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக வலுவடைந்துள்ளது. நேற்று மாலை தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய நிலையில் நிவர் புயலாக உருவாகி உள்ளதை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை மாலை காரைக்கால் மாமல்லபுரம் பகுதியில் புயல் கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் வருவதற்கு முன் நாம் என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்பதை பார்க்கலாம். நாம் முதலில் பயப்படாமல் இருக்க வேண்டும்.
நமது செல்போன்களில் முழுவதும் சார்ஜ் செய்து வைத்துக் கொள்ளவேண்டும். நியூஸ்பேப்பர், டிவி, ரேடியோவில் புயல் சம்பந்தமான தகவல்களை அவ்வப்போது தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். அரசு ஆவணங்கள், பதிவு மிக்க பொருட்களை பாதுகாப்பான இடத்தில் பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டும். உங்களது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள தேவையான அனைத்து உபகரணங்களையும் தயாராக வைத்துக்கொள்ளவேண்டும். கால்நடைகளை வளர்ப்போர் அவற்றின் பாதுகாப்பிற்காக கட்டவிழ்த்து விட வேண்டும்.
புயல் வந்த பிறகு நாம் என்ன செய்ய வேண்டும் என்றால் எரிவாயு, மின் இணைப்புகளை துண்டித்து விட வேண்டும். ஜன்னல் கதவுகளை நன்கு மூடி வைக்கவேண்டும். தங்கியிருக்கும் வீடு பாதுகாப்பற்றதாக இருந்தால் புயல் வருவதற்கு முன்கூட்டியே அந்த இடத்திலிருந்து வேறு இடத்திற்கு சென்று இருக்கவேண்டும். செய்திகளை அவ்வப்போது தெரிந்துகொண்டு காய்ச்சல், இருமல், சளி போன்றவற்றை தவிர்ப்பதற்கு தேவையான வசதிகளை செய்து கொள்ள வேண்டும். அதிகாரப்பூர்வ எச்சரிக்கைகள் மட்டுமே நம்பவும்.
பாழடைந்த கட்டிடங்கள் இருப்பவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு சென்று விட வேண்டும். மின்கம்பங்கள், மின்மாற்றிகள், மின் கம்பிகளை கவனித்து செல்ல வேண்டும். முடிந்தவரை பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும். மீனவர்களுக்கு எச்சரிக்கை ரேடியோக்களில் கூறப்பட்டிருக்கும். உங்களது படகுகளை பத்திரமாக எடுத்துச் வைத்துக்கொள்ள வேண்டும். கடலுக்கு செல்ல வேண்டாம்.