நிவர் புயலின் எதிரொலியாக நாளை முதல் சென்னை விமான நிலையம் மூடப்படுகிறது என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நிவர் புயல் முன்னெச்சரிக்கையாக சென்னை விமான நிலையம் இன்று இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை மூடப்படுகிறது. அதேபோல் இரவு 8 மணிக்கு மேல் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்படுவதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. சூழலைப் பொருத்து நாளை ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.