Categories
மாநில செய்திகள்

நிவர் புயல் எதிரொலி… விடுமுறை அறிவிப்பு… அரசு அதிரடி…!!!

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிர புயலாக உருவெடுத்து உள்ளது. அது விரைவில் மாமல்லபுரம் மற்றும் காரைக்கால் இடையே கரையை கடக்க உள்ளது. அதனால் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவர்கள் அவரவர் வீடுகளிலேயே பத்திரமாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |