நிவர் புயலின் காரணமாக தமிழக அரசு நாளை 13 மாவட்டங்களுக்கு மட்டும் பொது விடுமுறை அளிப்பதாக அறிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலமானது வலுவடைந்து தற்போது தீவிர புயலாக மாறியுள்ளது. இந்த நிவர் புயலானது இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை அதி தீவிர புயலாக மாறி கரையைக் கடக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், கடலூர் மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட 13 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புயலின் காரணமாக இன்று தமிழகம் முழுவதும் பொது விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் நாளை இந்த 13 மாவட்டங்களுக்கு மட்டும் பொது விடுமுறை அளிப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.