நிவர் புயல் எப்படி நகர்கின்றது என்பதை இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் கொடுத்துள்ளது.
கடலூருக்கு தென்கிழக்கே 150 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுவைக்கு தென்கிழக்கே 190 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னை தென் கிழக்கில் 250 கிலோ மீட்டர் தொலைவிலும் நிவர் புயல் மையம் கொண்டுள்ளது. மணிக்கு 11 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் நகர்ந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.