தமிழகத்தில் புயல் இன்று அதிகாலை கரையை கடந்ததாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.
சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் இன்று அதிகாலை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பது, “வங்க கடலில் உருவான நிவர் புயல் புதன் இரவு 11 மணியளவில் கரையை கடக்க தொடங்கி இன்று அதிகாலை 2.30 மணி வரை முழுவதுமாக கரையை கடந்தது. அதி தீவிர புயலாக இருந்த நிவர் தற்போது தீவிர புயலாக மாறி நிலப்பகுதியே வந்தடைந்துள்ளது. அது வடமேற்கு திசையில் நகர்ந்து கொண்டிருக்கிறது.
அதனால் திருவண்ணாமலை, வேலூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும். கடந்த 6 மணி நேரமாக வட மாவட்டங்களில் கன மழை பெய்து கொண்டிருக்கிறது. சென்னையில் இரவு முழுவதும் பலத்த காற்றுடன் மழை கொட்டி தீர்த்தது” என்று அவர் கூறியுள்ளார்.