நிவர் புயல் காரணமாக தென்மாவட்டங்களுக்கு செல்லும் 27 ரயில்கள் நாளை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தமிழகத்தில் நிவர் புயல் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக சென்னையில் நேற்று முதல் கனமழை பெய்து வருகின்றது. பல இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. இதற்கிடையில் 27 ரயில்களை நாளை ரத்து செய்வதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி சென்னை சென்ட்ரல், எழும்பூரில் இருந்து காரைக்குடி, மதுரை, திருச்சி, குமரி, தஞ்சை, கோவை உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் ரயில்கள் இரு மார்க்கத்திலும் ரத்து செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது. கன்னியாகுமரி-நிஜாமுதீன் சிறப்பு ரயில் 28ஆம் தேதி ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் முன்பதிவு செய்த பயணிகளுக்கு டிக்கெட் கட்டணம் திருப்பி அளிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.