சென்னையில் புயல் காரணமாக அதிக பாதிப்பு ஏற்படும் என்பதால் மக்கள் புகார் அளிக்க அவசர எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது தாழ்வு மண்டலமாக வலுவடைந்து புயலாக மாறியுள்ளது. தற்போது நிவர் புயல் சென்னையை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. அது நாளை மாமல்லபுரம் மற்றும் காரைக்கால் இடையே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் புயல் காரணமாக சென்னையில் பாதிப்பு ஏற்படும் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதனையடுத்து சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் 24 மணிநேர கண்காணிப்பு மையம் திறக்கப்பட்டுள்ளது. மேலும் 1913 என்ற எண்ணிலும், 044-25384560, 25384540 என்ற அவசர எண்களிலும் மக்கள் புகார் அளிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.