தமிழகத்தில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் தங்களின் முக்கிய ஆவணங்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என முதல்வர் கூறியுள்ளார்.
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது தீவிரமடைந்து புயலாக மாறியுள்ளது. அதனால் புயல் முன்னெச்சரிக்கையாக பொதுமக்கள் அனைவரும் தங்களின் ஆதார் கார்டு, ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தகங்கள் மற்றும் கல்வி சான்றிதழ்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை நீர் படாத வகையில் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மேலும் பெட்ரோல் மற்றும் டீசல் பங்குகளில் போதுமான அளவு இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளார்.