Categories
மாநில செய்திகள்

நிவர் புயல்… பொதுமக்களுக்கு அரசு அறிவுரை…!!!

புயல் காரணமாக மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் எனவும் அரசு அறிவுறுத்தியுள்ளது.

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடைந்து தீவிர புயலாக உருவாகியுள்ளது. அதனால் சென்னை மற்றும் புதுவையில் கனமழை பெய்து வருவதால் பாதுகாப்பிற்கு தேசிய பேரிடர் மேலாண்மை குழு குறைந்துள்ளது. தாழ்வான பகுதி, பழைய கட்டிடங்களில் வசிக்கும் மக்கள் நிவாரண முகாம்களுக்குச் செல்ல தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசு அறிவுறுத்தியுள்ளது.

மேலும் மழை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்படலாம் என்றும், சாலைகளில் மரங்கள் விழலாம் என்றும், மக்கள் வெளியே செல்வதை தவிர்க்கவும் அறிவுறுத்தியுள்ளது. மேலும் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் பேருந்து மற்றும் ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடந்து கொண்டிருக்கிறது.

Categories

Tech |