Categories
மாநில செய்திகள்

நிவர் புயல்… மக்களுக்கு தடை… சீல் வைப்பு… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் மற்றும் புதுச்சேரி எல்லை சீல் வைக்கப்பட்டு மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

வங்க கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் தீவிரமடைந்துள்ளதால் இன்று இரவு மாமல்லபுரம் மற்றும் காரைக்காலில் இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் மற்றும் புதுச்சேரி எல்லை சீல் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் விழுப்புரம் மாவட்டம் புத்துபட்டு என்ற இடத்தில் இரு மாநிலத்தை இணைக்கும் சாலை, தடுப்பு வேலிகள் வைத்து மூடப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி சென்னை கிழக்குக் கடற்கரை மற்றும் சாலையில் போக்குவரத்து தடை விதிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் மக்கள் நடமாட்டத்தை தடுக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

Categories

Tech |