Categories
மாநில செய்திகள்

“நிவர் புயல் முன்னெச்சரிக்கை” நீங்கள் என்னென்ன செய்யவேண்டும்..? செய்ய கூடாது…? வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

நிவர் புயல் கரையை கடக்க இருப்பதால் மக்கள் புயலின் போதும், புயலுக்கு பின்னும் என்ன செய்ய வேண்டும் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் தெற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது இன்று காலை தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதால், அடுத்த 24 மணி நேரத்தில் இது புயலாக மாறும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த புயலுக்கு நிவர் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த நிவர் புயல் நாளை 25ஆம் தேதி மாமல்லபுரத்தில் உள்ள கரையைக் கடக்கலாம் என்றும், அப்போது கடலோர மாவட்டங்களான சென்னை, புதுச்சேரி கடலூர் மற்றும் நாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றும், கடல் பகுதியில் சூறாவளியும் வீசிம் என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது? என்று தெரிந்துகொள்ளவது  அவசியமாகியுள்ளது. புயல் ஏற்படும் போதும், வந்த பிறகும் கவனமாக இருக்க வேண்டிய சில விஷயங்களை வானிலை ஆய்வு மையம் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

  1. மின் சப்ளை மற்றும் கேஸ் சிலிண்டர் இரண்டும் கட்டுக்குள் இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும். அப்படி இல்லை என்றால் புயல் வரும் வேளையில் மெயின் பெட்டியை நிறுத்திவிடவும்.
  2. வீட்டின் கதவுகளை பூட்டி வைக்கவும்.
  3. வீடு பாதுகாப்பான இடத்தில் இல்லையெனில் புயலுக்கு முன்பாகவே பாதுகாப்பான இடத்திற்கு சென்று விடுங்கள்.
  4. வதந்திகளை நம்பாதீர்கள்.
  5. கொதிக்க வைத்த நீரை மட்டும் குடிக்க வேண்டும்.
  6. கட்டுமானம் நடக்கும் மற்றும் பலவீனமான கட்டிடங்களுக்கு பக்கத்தில் போக வேண்டாம்.
  7. புயல் வந்த பின் மின் வயர்கள் அறுந்து கிடக்கும் வாய்ப்புள்ளதால் மின்கம்பங்கள் பக்கத்தில் செல்லாதீர்கள்.
  8. சாப்பிட தேவையான பொருட்களை சேமித்து வைத்து கொள்ளுங்கள்.
  9. முக்கியமான ஆவணங்களை பிளாஸ்டிக் கவரில் போட்டு வைத்து கொள்ளுங்கள்.

Categories

Tech |